×

ஐபிஎல்லை விட இந்தியாவுக்காக விளையாடுவது முக்கியம்: கபில்தேவ் பேட்டி

மும்பை: தென்ஆப்ரிக்காவுக்குஎதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என இழந்தது. இதனால் டெஸ்ட்டிற்கு தனியாக பயிற்சியாளரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபற்றி முன்னாள் கேப்டன்கபில்தேவ் கூறியதாவது:

இதுபற்றி எனக்குத் தெரியாது. அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. ஆனால். கிரிக்கெட்டுக்கு எது நல்லது, அதை பிசிசிஐ செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் பணத்தை விரும்புகிறார்கள். ஆனால் சில வீரர்கள் அது மிகவும் முக்கியம் என நினைக்கிறார்கள். ஐபிஎல்லில் விளையாடுவதை விட இந்தியாவுக்காக விளையாடுவது இன்னும் முக்கியம் நான் நான் நினைக்கிறேன், என்றார். டெஸ்ட், ஒன்டே, டி20 என எந்த கிரிக்கெட்டை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட்டை அதன் அனைத்து வடிவங்களிலும் ரசிப்பதாக கூறினார்.

Tags : India ,IPL ,Kapil Dev ,Mumbai ,Test ,South Africa ,Tests ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...