கீழ்வேளூர் அருகே குளக்கரை மண்ணை கடத்திய 3 பேர் கைது

கீழ்வேளூர், ஜன. 19: கீழ்வேளூர் அடுத்த வலிவலம் இதயக்கமலம் சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் மூன்று பக்கமும் குளம் உள்ளது. இதில் ஒரு பக்கம் கீழ்வேளூர் கச்சனம் சாலை உள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி இக்குளக்கரையின் மண்ணை 3 பேர் சாக்கில் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் எழுத்தர் குப்புசாமி வலிவலம் போலிசில் புகார் கொடுத்தார். போலீசார் மண் வெட்டி கடத்திய வலிவலம் தென்சாரி செல்வராஜ் மகன் சதீஸ்(26), துரைசாமி மகன் ஜுவா(39) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கோவில்பத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டி, சீனிவாசன் மகன் சண்முகவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>