×

கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி புதிய ஐடிஐ துவங்க விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜன. 19: புதிய ஐடிஐ துவங்க விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2021-2022ம் கல்வியாண்டிற்கு 2021ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள்(ஐடிஐ) துவங்குவதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021-22ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். என்இஎப்டி மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம்) செலுத்தும் போது, தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மெண்ட்டில் கண்டறிய வசதியாக தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்தாண்டு ஏப்ரல் 30ம்தேதியாகும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், விபரங்களுக்கு www.skiltraining.tn.gov.in என்ற இணையதளம் கோயம்புத்தூரில் உள்ள மண்டல் பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தின் தொலை பேசி எண் 044-22501006, 0422-2646222 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Motorists ,Avadi ,ITI ,Karur Rani Mangammal Road ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!