திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது

திருச்சி, ஜன. 17: திருச்சி கோட்டை போலீஸ் சரகம் அண்ணா நகர் ஜெகஜோதி மாரியம்மன் கோயில் தெருவி–்ல் கஞ்சா விற்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் அரிஜன தெருவை சேர்ந்த முருகேசன் (22), வடக்கு தாராநல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ.230 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் இபி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் கஞ்சா விற்ற தென்றல் சாலையை சேர்ந்தவர் ரவுடி சசிகுமார் (22) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.120 பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கரை எடத்தெருவில் ஒரு சர்ச் அருகில் கஞ்சா விற்ற சோனாஸ் (59) என்பவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை காந்தி மார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் பீமநபர் முருக்குகார தெருவில் பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற பீமநகரை சேர்ந்த ராஜாவை (50) பாலக்கரை போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>