×

கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்

மணப்பாறை, ஜன. 17: மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கீரனூர் கிராமம் வழியாக திருச்சி- திண்டுக்கல் ரயில் பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக தினம்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே மக்களின் பயன்பாட்டுக்காக சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இப்பாதையை புதுவாடி, மீனாட்சியூர், குமரம்பட்டி, சீத்தக்காடு, சுக்காவளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனங்களி–்ல் செல்ல பயன்படுத்தி வந்தனா். ஆனால் சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சுரங்கப்பாதையில் இடுப்பளவு உயரத்துக்கு மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்பவா–்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மழைநீா் தேங்கியிருப்பதால் சுரங்கப்பாதையை தவிர்க்கும் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல திண்டுக்கல் மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சென்று 4 கி.மீ தூரம் சுற்றி வையம்பட்டி பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரில் நீச்சலடித்து தான் வெளியேற வேண்டிய அவலமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுதொடா–்பாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியினர் ஒவ்வொரு மழை காலத்திலும் இப்பிரச்னையை சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Tags : railway tunnel ,Keeranur ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...