நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை மலைக்கோட்டையில் குவிந்த பக்தர்கள் கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

துறையூர், ஜன. 17: பெரம்பலூர் மாவட்டம் பச்சமலையில் உள்ள மலையாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர் நேற்று முன்தினம் துறையூர் அருகே த.முருங்கப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் அங்கிருந்து த.பாதர்பேட்டை வழியாக தனது சொந்த ஊரான மலையாளப்பட்டிக்கு குறுக்கு வழியில் நடந்து சென்றார். அப்போது பாதர்பேட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தார். இரவு முழுவதும் கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். நேற்று காலை அவரின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்கள், உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி கிருஷ்ணனை உயிருடன் மீட்டனர்.

Related Stories:

>