×

மழையால் நெற்பயிர்கள் பாதித்ததால் உரிய நிவாரணம் கேட்டு வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், ஜன. 17: திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததோடு நெல்மணிகள் முளைக்க துவங்கியுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையாக வந்து விசாரித்து நிவாரணம் பெற்று தருவதற்கு உரிய கணக்கெடுப்பு எடுக்கவில்லையென அப்பகுதி விவசாயிகள் நெப்போலியன் தலைமையில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அறுவடை செய்யவுள்ள நிலை நெற்பயிர்களில் நெல்பழம் நோய் தாக்குதல் பெரியளவில் உள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் நெல்லின் விலை குறையும் அபாயம் உள்ளது. எனவே நெல் பழம் நோய் பாதித்த பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சரவணன், பழனிச்சாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை