சேதுபாவாசத்திரம் பகுதியில் தைப்பூசத்திற்கு மாறிய மாட்டுப்பொங்கல்

சேதுபாவாசத்திரம் ஜன.17:தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் பெய்து வரும் இடைவிடாத மழையால் மாட்டுப் பொங்கல் தைப்பூசத்திற்கு மாறியது. சேதுபாவாசத்திரம் கிராம பகுதிகளில் ஐதீக முறைப்படி மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படும்.மாடுகளை குளப்பாட்டி நெற்றியில் திலகம் இட்டு ஒருசிலர் மாட்டு கொம்புகளில் வர்ணம் தீட்டி கழுத்தில் மாலை அணிவித்து.ஒரு சில பகுதிகளில் கிராமம் முழுவதும் ஒற்றுமையுடன் ஒரே இ்டத்தில் மாடுகளை கட்டி பொங்கல் வைப்பார்கள்.பல்வேறு இடங்களில் 10 பேர் 20 பேர் என சேர்ந்து மாடுகளை கட்டி பொங்கல் வைப்பார்கள்.

மண்ணால் விநாயகர் செய்து சர்க்கரை இன்றி வெண் பொங்கல் தான் வைக்கப்படும்.பொங்கல் வைத்தபின் அனைத்து பொங்கல் பானைகளிலும் போதுமான அளவு பொங்கல் எடுத்து வாழை இலை போட்டு அதில் வாழைப்பழம்,சர்க்கரை,தேங்காய் துருவல் அனைததும் ஒன்று சேர்த்து நன்றாக பிசைந்து படையல் செய்து மாடுகளுக்கு ஊட்டிவிட்டு அதன் மற்றவர்கள் சாப்பிடுவார்கள். பிரசாதம் போல் வழங்கப்படும் சாதத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்டுக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்பதால் விரும்பி சாப்பிடுவார்கள்.இது கிராம பகுதிகளில் தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு இடைவிடாத மழை பெய்து வந்ததால் இதற்கான வழிவகையே கிடையாது.எனவே 80 சதவீதம் பேர்கள் நேற்று முன் தினம் மாட்டு பொங்கல் வைக்காமல் தைப்பூசத்திற்கு மாட்டுப் பொங்கலை மாற்றியுள்ளனர்.

Related Stories:

>