காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர், ஜன. 17: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் மாட்டுப் பொங்கலின் மறுநாள் காணும் பொங்கல் அன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் நடப்பாண்டு நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு கிராமங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி கோகோ ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் சாக்கு ஒட்டம், கோலப்போட்டி பானை உடைத்தல் சைக்கிள் பந்தயம் இசை நாற்காலி கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>