பொங்கல் விளையாட்டு போட்டி

நாகை, ஜன.17: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூரில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டியில் ஓட்டப்போட்டி, சாக்கு ஓட்டம், உருளை கிழங்கு சேகரித்தல், இசைநாற்காலி, பலூன் உடைத்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலாநடராஜன், கிராம தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இளைஞர் நற்பணிமன்ற தலைவர் ரகு வரவேற்றார். பரிசுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த செல்வம், செந்தில், சிவா, மணி, தீபக் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>