×

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிசி,எம்பிசி மாணவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜன. 17: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடிஐ, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மாணவ, மாணவிகளின் ஆண்டு வருமானம் ரூ. 2லட்சத்துக்கு அதிகமாகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ. 2லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு 2019-20ம் கல்வி ஆண்டு முதல் உதவித்தொகை வழங்குவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2லட்சம் வரை இருக்க வேண்டும்.கல்வி உதவித்தொகைக்கு 2020-21ம் கல்வி ஆண்டிற்கான புதியது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்களிடம் இருந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்து செய்து, இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், சேப்பாக்கம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MBC ,Central Government Educational Institutions ,
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...