கரூர் ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி சரக ஐஜி ஆய்வு

கரூர், ஜன.17: திருச்சி சரக ஐஜி கரூர் ஆயுதப்படை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சி சரக ஐஜி ஜெயராம், கரூர் மாவட்ட எஸ்பி பகலவன் ஆகியோர் நேற்று ஆயுதப்படை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் போலீசார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுடன் கலந்துரையாடினர். மேலும், கேன்டீன், காவலர் காய்கறி அங்காடி போன்றவற்றை பார்வையிட்ட ஐஜி, இதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தூய்மை பணி மேற்கொள்ளும் பணியையும் மேற்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். மேலும், காவல் நிலையத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில், ஆயுதப்படை டிஎஸ்பி அய்யர்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>