காரியாபட்டி மல்லாங்கிணறில் பொங்கல் விழா கோலாகலம்

காரியாபட்டி, ஜன. 17:  காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் திமுக சார்பில் பொங்கல் விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையில் திமுக வெற்றி பெறும். தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி’ என்றார். இதில் நேர்முக உதவியாளர் பாலகுரு, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட பிரதிநிதி கோச்சடை, தொழிற்சங்கம் கருப்பையா, முடியனூர் முத்தாண்டி, முருகன், முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>