விருதுநகர் அருகே வீடு இடிந்து மூதாட்டி பலி

விருதுநகர், ஜன. 17:  விருதுநகர் அருகே பட்டம்புதூரில் தகர மண்சுவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் ருக்குமணி (77). தொடர் சாரல் மழையின் காரணமாக இவரது வீட்டின் மண் சுவர் ஈரமாகி இருந்த நிலையில் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த ருக்குமணி மீது சுவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>