சாத்தூரில் வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

சாத்தூர், ஜன. 17: சாத்தூர் பங்களா தெருவை சேர்ந்தவர் முருகன் (45). மாவட்ட  குற்றப்பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை  சாத்தூர் மெயின்ரோடு பழைய ஜிஹெச் அருகே வாக்கிங் சென்ற போது சரக்கு வாகனம்  மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில்  முதலுதவி அளித்து விட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இறந்த முருகனின் உடலுக்கு டிஎஸ்பி அருணாச்சலம் தலைமையிலான காவலர்கள் 24 குண்டுகள்  முழங்க இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

Related Stories:

>