×

சின்னமனூரில் தெருவில் ஓடும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் ஒரு மாதமாக சீரமைக்கப்படவில்லை; மக்களுக்கு சுகாதாரக்கேடு

சின்னமனூர், ஜன. 17: சின்னமனூரில் சாலையில் ஆறாக ஓடும் பாதாளச் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 1வது வார்டை தவிர்த்து, 26 வார்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4 மற்றும் 3வது வார்டுகளுக்கு இடையே காளியம்மன் கோயில் தெருவில், பாதாளச் சாக்கடை மேன்ஹோலிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இப்பகுதியில், ரேஷன் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. கார்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் என வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன. சாலையில் ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் கடந்த ஒரு மாதமாக நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்த சாலையை கடந்து செல்லும் நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் காளியம்மன் கோயில் தெருவில் பாதாளச் சாக்கடை மேன்ஹோலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : street ,Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி