×

சனிப்பெயர்ச்சி 3வது வாரம் குச்சனூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சின்னமனூர், ஜன. 17: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 500 ஆண்டு பழமையான சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், ஆறு கண்களையும் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூர்த்தியாய் சனீஸ்வர பகவான் உள்ளார். கடந்த டிச.27ம் தேதி தனுசு ராசியில் சஞ்சரித்த சனி பகவான் மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதைதொடர்ந்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாரம், வாரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஜாதகத்தில் சனி பகவானின் பிடியில் சிக்கியவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றனர். அதற்காக தோஷ பரிகாரம் செய்ய குச்சனூர் கோயிலுக்கு ஏராளமாக வருகை புரிந்து சுரபி நதியில் குளித்துவிட்டு பழைய துணிகளை ஆற்றில் விட்டு புத்தாடை அணிந்து விநாயகருக்கு துளசி மாலை சாற்றி, எள் விளக்கிட்டு உப்பு, பொரி கொடிமரத்தில் படைத்து மண் காக்கையினை வலது, இடது என 3 முறை தலையில் சுற்றி காக்கை பீடத்தில் வைப்பர். பிறகு மூலஸ்தனத்தில் உள்ள சனினீஸ்வர பகவானுக்கு கருப்பு அங்கி சாற்றி தேங்காய் பழத்துடன் அர்ச்சனை செய்து வழிபட்டு தோ ஷங்களை நிவர்த்தி செய் கின்றனர். மூன்றாவது வார சனி க்கிழமையான நேற்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Devotees ,Kutchanur Temple ,Saturn ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...