காப்பி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

போடி, ஜன. 17: போடி அருகே அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, உரல்மெத்து, வடக்கு மலை, குரங்கணி, கொட்டக்குடி, போடி மெட்டு ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள காப்பி தோட்டங்களில் கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகளின் படிப்பிற்காக காப்பி வாரியத்தில் 2020- 2021ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் பிள்ளைகள் 10ம் மற்றும் 12ம் வகுப்பு முடித்து பட்டய கல்வி, தொழிற்கல்வி, இன்ஜினியரிங், விவசாயம், மருத்துவ படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அருகில் உள்ள முதுநிலை, இளநிலை காப்பி வாரிய அலுவலங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>