×

நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது முழுக்கொள்ளளவை எட்டியது வைகை அணை கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள எச்சரிக்கை

ஆண்டிபட்டி, ஜன. 17: ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணை 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும் விசாயத்திற்கும் முக்கிய ஆதரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. இதனால் பொதுப்பணித்துறையினர் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். பின், நேற்று முன்தினமே முழு கொள்ளவை எட்டும் என்று எண்ணி இருந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்தது.

பின்னர் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் 68.50 அடியை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் அதன் முழுகொள்ளளவான 69 அடியை எட்டியது. பொதுப்பணித்துறையினர் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 69 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரிநீரை அப்படியே வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்தமுறை இந்த தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் வைகை ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.ஆற்றில் யாரும் குளிக்கவோ, துவைக்கவே கூடாது என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...