×

கம்பத்தில் சாலையை சீரமைத்த போலீசார்

கம்பம், ஜன. 17: தேனியில் இருந்து குமுளிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில், கம்பம் நகரில் தம்பீஸ் தியேட்டர் அருகே ரோட்டில் சுமார் 100 மீட்டர் தூரம் மழையினால் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் இருந்ததால் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பலநாட்கள் ஆகியும் நெடுஞ்சாலைதுறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில், எஸ்ஐ விஜய் ஆனந்த், ரோமியாதாமஸ் மற்றும் போலீசார் ஜேசிபி வாகனத்திதை கொண்டு சென்று அப்பகுதியில் தற்காலிகமாக சிறுகற்கள் மற்றும் மண் மூலம் பள்ளத்தை மேவி சரிசெய்தனர். சேதமடைந்த ரோட்டை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை தாமதப்படுத்தியதால், கம்பம் போலீசாரே களமிறங்கி சாலையை சீர் செய்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...