இளையோர் தினவிழா

காரைக்குடி, ஜன. 17: காரைக்குடி வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம், நேரு யுவகேந்திரா சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தேசிய இளையோர் தின விளையாட்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டுவிழா நடந்தது. நத்தர் அஷ்ரப்கான் வரவேற்றார். வள்ளல் அழகப்பர் இளையோர் மன்ற நிறுவனர் முகமதுகனி ராஜ்கபூர் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர்  பிரவின்குமார் முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் சிறந்த சேவை புரிந்த 10 மன்றங்களுக்கு விருது வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணன், அக்னி சிறகுகள் சங்க துணைத்தலைவர் பக்கீர்முகமது ஆகியோர் பரிசு வழங்கினர்.  செயலாளர் பிரியா, பொருளாளர்  இக்னோசியஸ் பெலிக்ஸ், அம்ஜத்கான் கலந்து கொண்டனர். அருண்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>