ஐயப்பன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை

கீழக்கரை, ஜன.17: ராமநாதபுரம் மாவட்டம்  ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம்  இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக சபரிமலையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ராமேஸ்வரம் முதல் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி ஏந்தி பாதயாத்திரையாக வந்தடைந்தனர். சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் போல் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்து மகர ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை குருக்கள் மற்றும் வல்லபை ஐயப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories:

>