செல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா

உசிலம்பட்டி, ஜன. 17:  செல்லம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. மதுரை எம்பி வெங்கடேசன் தலைமை வகிக்க, முன்னாள் எம்எல்ஏ கதிரவன், புத்தக ஆசிரியர் தேடாமணி முன்னிலை வகித்தனர். எம்பி பேசுகையில், ‘இந்த நூல் கோயில் சம்பந்தமாக இருந்தாலும், கிராமத்து அத்தியாயம் மாறாமல் பழங்கான வாழ்க்கை முறையை அழகாக எழுதி வடிவமைத்துள்ளார்’ என்றார். இதில் டாக்டர் ஜெயமணி, தமிழ்புலவர் சின்னன்ஐயா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தாளாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜய்பிரபாகர், மாவட்ட கவுன்சிலர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>