சோழவந்தான் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் களைகட்டியது

சோழவந்தான், ஜன. 17:  சோழவந்தானில் வாடிப்பட்டி ரோடு வைகை குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார்.செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனி வரவேற்றார். இதையடுத்து பல்வேறு விளையாட்டு போட்டிகள், கோல போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வசந்தி,பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு,எம்.வி.எம்.கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன், பேரூர் செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பேட்டை, முதலியார் கோட்டை, சங்கங்கோட்டை, பசும்பொன் நகர், ஆலங்கொட்டாரம்,கள்ளர் தெரு,கோவிந்தம்மாள் தெரு, அக்ரஹாரம்,மேல ரத வீதி,தெற்கு ரதவீதி, நாடார் தெரு, கீழ்ப் பச்சேரி,மேலப்பச்சேரி,சப்பானி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலும் விக்கிரமங்கலம், காடுபட்டி, குருவித்துறை, மன்னாடி மங்கலம், தென்கரை, முள்ளிப்பள்ளம், மேலக்கால், கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், திருவேடகம், ரிஷபம், நெடுங்குளம், திருவாலவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர்,நாச்சிகுளம், இரும்பாடி,க ருப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories:

>