×

பட்டிவீரன்பட்டி அருகே எச்சரிக்கை அறிவிப்பின்றி நடக்கும் பாலப் பணி வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி, ஜன. 17: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம்-சித்தரேவு மெயின்ரோட்டில் எச்சரிக்கை அறிவிப்பின்றி நடக்கும் பாலம் கட்டுமான பணியால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்டிவீரன்பட்டி அருகே, விரிவான சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.90 லட்சத்தில் நொச்சி ஓடையில் புதிய பாலத்துடன் கணேசபுரம்-கதிர்நாயக்கன்பட்டி இடையே புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நொச்சி ஓடை தலைப்பாலம் அகற்றப்பட்டு, தரைப்பால வேலை தொடங்கியுள்ளது. இப்பணிக்காக பாலம் அருகே மாற்றுப்பாதை அமைத்துள்ளனர்.

இதில், வாகனங்கள் செல்வதற்காக தற்காலிக தார்ச்சாலை அமைக்காமல், பாலத்தை இடித்த செம்மண்ணை கொட்டி தற்காலிக சாலை அமைத்துள்ளனர். மழை பெய்ததால், தற்காலிக சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், பாலம் வேலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இல்லை. செம்மண்ணால் தற்காலிக வேகத்தடை அமைத்துள்ளனர். இதுவும் மழையில் கரைந்துவிட்டது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattiviranapatti ,motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...