×

இடைப்பாடி தாலுகா அலுவலகம் முற்றுகை பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்

இடைப்பாடி, ஜன.17:  எருதாட்ட விழாவிற்காக கோயிலை காளை சுற்றி வர அனுமதி கோரி கிராமமக்கள் இடைப்பாடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இடைப்பாடி சுற்றியுள்ள தாதாபுரம், வேம்பனேரி, முனியம்பட்டி, வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை எருதாட்டம் நடக்கிறது. இதனையொட்டி காலங்காலமாக தாங்கள் வளர்க்கும் காளைகளை மாரியம்மன், அய்யனாரப்பன் கோயில் பூசாரி திருநீறு போட்டு, இருபுறமும் இளைஞர்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கோயிலை சுற்றி வருவது வழக்கம். தற்போது வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இதை தடை செய்துள்ளனர். இது குறித்து நேற்று வெள்ளாலபுரம், சின்னப்பம்பட்டி கிராமமக்கள் சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கம், தாசில்தார்கள், முத்துராஜா, செல்வகுமார், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடந்தது. அப்போது தாதாபுரம் பகுதி ஊர் பொதுமக்கள் இடைப்பாடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். காலங்காலமாக காளை கோயிலை சுற்றி வருகிறது. வெளி பகுதிகளில் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே, தடையை நீக்கி வழக்கமாக கோயிலை சுற்றி வரும் காளைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, காலங்காலமாக வருகிற காளை மட்டும் கோயிலைச் சுற்றி வந்து, பின்பு தங்கள் பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு நிபந்தனையுடன் உத்தரவு வழங்கப்பட்டது.

Tags : siege talks ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்