×

ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ ஆலய அசன பண்டிகை

 

கோவை, டிச.10: ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் 8வது அசனப் பண்டிகை நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர்  ஆயர் ஆஸ்டின், சிறப்பு விருந்தினர் கிறிஸ்டோபர் பால் ஆகியோர் அசனத்தை தொடங்கி வைத்தனர். அசனப் பண்டிகைக்காக ஆட்டு இறைச்சி 500 கிலோ, அரிசி 600 கிலோ,200 கிலோ காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞ்ஞானபுரம் சமையல் கலைஞர்கள் உணவை ஏற்பாடு செய்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சபை அங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். அசன ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர் டாலின், பொருளாளர் விஜயா, முன்னாள் செயலாளர் திஜா டாலின், முன்னாள் பொருளாளர் பொன்ராஜ் மற்றும் போதக சேகர உறுப்பினர்கள், பி.சி., டி.சி உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஆயர்கள் சாமுவேல் ஜான்சன், சந்திரசேகர், காட்வின் ஜாய்சன் மற்றும் ஜெபசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Ondipudur CSI Temple Asana Festival ,Coimbatore ,8th Asana Festival of Ondipudur CSI All Saints Temple ,Bishop ,Austin ,Christopher Paul ,Asana ,
× RELATED கோவை அரசு பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி