சமத்துவ பொங்கல் விழா

பள்ளிபாளையம், ஜன.17:  பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும்  மக்கள் கிராமசபை கூட்டம், 19ம்தேதி காலை நடக்கிறது.  இதற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த அரங்கில் சமத்துவ பொங்கல்  விழாவை, திமுக மகளிர் அணியினர் ஏற்பாடு செய்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட  செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். விழாவில் 10க்கும்  மேற்பட்ட பானைகளில், மகளிர் அணியினர் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு  செய்தனர். பின்னர் கரும்பு, சர்க்கரை பொங்கல் தொண்டர்களுக்கு  வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை  செல்லதுரை செய்திருந்தார்.விழாவில், யுவராஜ்,  நடனசபாதி, குமார், ரவிச்சந்திரன், தங்கவேல், செல்வம், கார்த்திகேயன், கார்த்திராஜ், ராமமூர்த்தி, ரவிமோகன், மதுரா செந்தில், ராதாகிருஷ்ணன், ஜிதேந்திரன், ரமேஷ், வேல்முருகன், வெப்படை செல்வராஜ், பாலு, சுப்ரமணி, நடேசன், ராஜ்குமார், தமிழரசு, பாலமுருகன், பழனியப்பா வழக்கறிஞர் கிரி, கிருஷ்ணமூர்த்தி,  தங்கராசு, ஜெயகோபி, வினோத், ஜிம்செல்வம், செல்வராஜ், சுகுமார், ராஜபாண்டி,  கோட்டை ராஜேந்திரன், ராதாமணி, ராஜேஸ்வரி, மலர்விழி, அம்சா, மணிமேகலை,  பாக்கியலட்சுமி, மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>