வாலிபருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜன.17:  சிங்காரப்பேட்டை அடுத்த மிட்டப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சிக்கன் கடை நடத்தி வருபவர் சையத்பாஷா(24). மிட்டப்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்த சஞ்சய்(22) என்பவர், இவரது கடைக்கு வந்து ஓசியில் சிக்கன் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுத்தால்தான் சிக்கன் கொடுக்க முடியும் என சையத்பாஷா தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய், தனது நண்பர்களான ராம்குமார்(23), அஜீத்(19), தினகரன்(20) ஆகியோருடன் வந்து சையத் பாஷாவுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அவர்கள் சையத்பாஷாவை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதை கண்ட அங்கிருந்தவர்கள், சையத் பாஷாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சஞ்சய், ராம்குமார், அஜீத், தினகரன் ஆகியோர் மீது சிங்காரப்பேட்டை எஸ்எஸ்ஐ அண்ணாமலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Related Stories:

>