சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி, ஜன.17:  பர்கூரில்  திமுக சார்பில், முன்னாள் எம்பி., சுகவனம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. அப்போது புதுப்பானை வைத்து, கரும்பு மற்றும் தோரணங்கள்  கட்டி பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற  அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் திமுக துண்டு வழங்கப்பட்டது. இதில்,  கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி  கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய  செயலாளர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, செல்வம், சாமிநாதன்,  பேரூர் செயலாளர் பாபு மற்றும் பொன்.குணசேகரன்,  தம்பிதுரை, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, நரசிம்மன்,  கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், அணிகளின் நிர்வாகிகள்  ரஜினிசெல்வம், நாராயணமூர்த்தி, துரை(எ)துரைசாமி மற்றும் தினேஷ்,  பார்த்தீபன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>