மினி டேங்க் திறப்பு

தேன்கனிக்கோட்டை, ஜன.17: தளி அடுத்த அந்தேவனப்பள்ளி ஊராட்சி தொட்டூர் கிராமத்தில்,  ஒன்றியக்குழு பொது நிதியில் இருந்து ₹2 லட்சத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார் அமைத்து, பைப்லைன் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், பேரூர் செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், ஒன்றிய கவுன்சிலர் கோபி, மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், நாராயணப்பா, இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், சக்திவேல், ஸ்ரீதர், வேணு, கிருஷ்ணன், நஞ்சப்பா, அந்துராஜ், சுரேஷ் உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>