×

38 இடங்களில் எருதாட்டம் 100 காளைகள் பங்கேற்பு

தர்மபுரி, ஜன.17: தர்மபுரி மாவட்டம், கடகத்தூரில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை எருதாட்டம் நடந்தது. இதில் 6 காளைகள் பங்கேற்றன. காளைகளை கோயில் முன் நிறுத்தி பூஜை போட்டு, மாலை அணிவித்தனர். பின்னர், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, இளைஞர்கள் கயிற்றில் இருபுறமும் பிடித்தவாறு விரட்டி சென்றனர். கூட்டத்தில் புகுந்த காளைகளால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இரவு சிலம்பாட்டம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. தர்மபுரி எஸ்வி ரோடு, காமாட்சியம்மன் கோயில்தெரு, அக்ரகார தெரு, வேடியப்பன்திட்டு, வெள்ளிப்பேட்டை, கொல்லப்பட்டி, குமாரசாமிபேட்டை மற்றும் தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல இடங்களில் எருதாட்டம் நேற்று நடந்தது.
காரிமங்கலம் ராமசாமி கோயில் சார்பில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதேபோல், சாமிசெட்டிப்பட்டி, பரிகம், பாளையம்புதூர், லளிகம், நலலம்பள்ளி, ஏலகிரியான்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் எருதுவிடும் விழா நடந்தது. எருதாட்டங்களை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். நேற்று ஒரே நாளில், 38க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த எருதாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாவட்டம் முழுவதும் நடந்த எருதாட்ட நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : places ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...