வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர், ஜன.17: காணும் பொங்கலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நேற்று தடை விதிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், தனக்கு வாழ்வளிக்கும் இயற்கையையும், கால்நடைகளையும் வணங்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் 3வது நாளான நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காலையில் குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெற்று அவர்களிடம் அன்பளிப்புகளை பெற்றனர்.அத்துடன், காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தடை எதிரொலியாக, வேலூர் கோட்டை பூங்கா, குடியாத்தம் மோர்தானா டேம், ராஜாதோப்பு அணை, அமிர்தி வன உயிரியல் பூங்கா மூடப்பட்டன. இதனால் விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டத்துடன் கானப்படும் இப்பகுதிகள் வெறிச்சோடியது. மேலும் இப்பகுதிக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Related Stories:

>