மின்சாரம் பாய்ந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

திருவேங்கடம், ஜன. 17:  திருவேங்கடம் தாலுகா, கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் விஜயராஜ் (45), அவரது அக்காள் விஜயலட்சுமி (57) ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இதையடுத்து இவர்களது வீட்டிற்கு சென்ற அமைச்சர் ராஜலட்சுமி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தென்காசி கலெக்டர் சமீரன் முன்னிலையில் வழங்கினார். அப்போது திருவேங்கடம் தாசில்தார் கண்ணன், குருவிகுளம் பிடிஓ ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் குருவிகுளம் தெற்கு சுப்பையா பாண்டியன், வடக்கு வாசுதேவன், சங்கரன்கோவில் ரமேஷ், மேலநீலிதநல்லூர் செயலாளர் வேல்முருகன், குருவிகுளம் கிளைச் செயலாளர் மோகன்சாமி உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>