புளியங்குடியில் திமுக கொடியேற்று விழா

புளியங்குடி, ஜன. 17:  புளியங்குடி நகர திமுக மற்றும் புளியங்குடி 1வது வார்டு சார்பில் திமுக நகர முன்னாள் செயலாளர் செல்வகுமார் நினைவு கொடி கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நகர பொறுப்பாளர் ராஜகாந்த் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பிச்சையா முன்னிலை வகித்தனர். 1வது வார்டு பிரதிநிதி வெங்கடேசன் வரவேற்றார். தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை, திமுக கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவகுமார், பேச்சாளர்கள் சுப்பு, அப்துல்ஜப்பார், மீனாட்சி சுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அருணாசலம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செண்பககுற்றாலம், நகர அவைத்தலைவர் இஸ்மாயில், துணை செயலாளர் குருராஜ்,  குருசாமி, பொருளாளர் ராஜாமணி,  இளைஞரணி செயலாளர் முத்துச்செல்வம், பேராசிரியர் நீலமேகம், முருகன், 11வது வார்டு செயலாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது புதிதாக திமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்ட 50 பேருக்கு உறுப்பினர் அட்டையை மாவட்ட பொறுப்பாளர் துரை வழங்கினார்.

Related Stories:

>