பைக் மோதி தொழிலாளி பலி

நாங்குநேரி ஜன. 17: கோபாலசமுத்திரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மாடசாமி (60) நாங்குநேரி அடுத்த வரமங்கைபுரத்தில் உள்ள இசக்கி என்பவர் வீட்டில் தங்கியிருந்து மாடு மேய்த்து வந்த இவர்   மறுகால் குறிச்சி நான்கு வழிச்சாலை விலக்கு பகுதியில் சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக சென்ற பைக் மோதியதில்  தூக்கி வீசப்பட்டு இறந்தார். தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆன்டோ பிரதீப்,  பைக்கை ஓட்டி வந்த குமரி மாவட்டம் இரைச்சகுளத்தைச் சேர்ந்த ஐயப்பன் (40) என்பவரை கைது செய்தார்.

Related Stories:

>