டெல்லி: எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஆவேசம் அடைந்துள்ளார். இவிஎம் இயந்திரங்கள் மீது மக்களுக்கு உள்ள சந்கேத்தை போக்க 2 வழிகள் உள்ளன. ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே வர வேண்டும் பகல் 2 மணி தலைப்புச் செய்திகள்
எஸ்.ஐ.ஆர். குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள அரசியல் சட்டத்தில் எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறும் என்று மக்களுக்கு சந்தேகம் உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் முழுவதும் ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. எந்த தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான காரணத்தை ஆணையம் தெரிவிக்க வேண்டும்.
இவிஎம் இயந்திரங்களின் சோர்ஸ் கோட் யாரிடம் உள்ளது என்று மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். மதர் போர்டுக்கான புரோகிராம் கணினி நிறுவனத்திடம் உள்ளதா அல்லது தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா?. மதர் போர்டுக்கான புரோகிராம் கணினி நிறுவனத்திடம் உள்ளதா அல்லது தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா?. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். மக்களவையில் எஸ்ஐஆர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மணீஷ் திவாரி வலியுறுத்தினார்.
