மதுபோதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது

திருப்பூர், ஜன.17:திருப்பூர்-தாராபுரம் ரோடு கோயில் வழி சாலையில் நேற்று இரவு ரூரல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஏடிஎம் மையத்தில் ஒருவர் கையில் கற்களுடன் நின்றதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.  அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம், பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (43) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பூர் இடுவம்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி செல்ல கோயில் வழி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய தேவேந்திரன் கோயில் வழி அருகே தனியார் காம்ப்ளக்சில் உள்ள ஏடிஎம்மில் கற்களை கொண்டு சேதப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, ரூரல் போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தேவேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories:

>