×

கொட்டும் பனியால் பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூர், ஜன.17: திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பனி கொட்டுவதால், இரவு மற்றும் காலை நேரங்களில், கடும் குளிரில் மக்கள் தவிக்கின்றனர். கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து, திருப்பூரில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. மாலை 6 முதல் இரவு முழுவதும் பனிப்பொழிவு நீடிக்கிறது. காலை 9 மணி வரை, பல பகுதிகளில் காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயிகள், வீடுகளுக்கு, இருசக்கர வாகனங்களில் பால் கொண்டு வருவோர், ரயில்கள் மற்றும் பஸ்களில் வெளியூர்களுக்கு செல்வோர் என பலரும், காலை நேரங்களில் குளிரில் நடுங்கி தவிக்கின்றனர். குளிரின் தீவிரம் தாங்க முடியாததால், பூங்கா, பள்ளிகள் மற்றும் ரோடுகளில், காலை நேரங்களில் “வாக்கிங்’ செல்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. திருப்பூரில் பிரதான ரோட்டோர கடைகளில் கம்பளி குல்லா, தொப்பி, பெட்ஷீட், குழந்தைகளுக்கான கம்பளி ஆடைகள் மற்றும் ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. பி.என்., ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், பிளாட்பார கடைகளில், கம்பளி ஆடை விற்பனை ஜரூராக நடக்கிறது.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...