பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்

ஊட்டி, ஜன.17: பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, வெளி நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பிய 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிலருக்கு கொரோனா தாக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதில், உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரித்து புனேவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இதனால், அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள், என்றார்.

Related Stories:

>