×

கோடப்பமந்து கால்வாய் தடுப்புச்சுவரை கட்ட கோரிக்கை

ஊட்டி, ஜன. 17: ஊட்டி கோடப்பமந்து பகுதியில் இருந்து கழிவு நீர் கால்வாய் ஒன்று நகரின் மையப்பகுதி வழியாக ஊட்டி ஏரியை சென்றடைகிறது. இந்த கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை. இது போன்ற சமயங்களில் மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள படகு இல்லம் செல்லும் சாலையில் கழிவு நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கிறது. மேலும், மத்திய பஸ் நிலையம் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் அடிப்புறத்தில் கால்வாயின் தடுப்பு சுவர் இடிந்துள்ள நிலையில், கழிவு நீர் எளிதாக சாலைக்கு வந்து விடுகிறது.  மேலும், சாலை மட்டுமின்றி ரயில்வே காவல்நிலையத்திலும் கழிவு நீர் தேங்கிவிடுகிறது. இந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே போலீசார் பாதிக்கின்றனர்.
எனவே, சாலையில் கழிவு நீர் தேங்காமல் இருக்க மத்திய பஸ் நிலையம் அருகே இடிந்துள்ள தடுப்பு சுவரை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Godappamandu ,
× RELATED கோடப்பமந்து கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை