×

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஸ்டார்கள் விற்பனை துவங்கியது

 

ஊட்டி, டிச. 9: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் ஸ்டார்கள், மரங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை அனைத்து கிறிஸ்துவ மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வீடுகளின் மேல் வண்ண வண்ண ஸ்டார்களை ஒளிர விட்டும், வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து, குடில்கள் அமைத்து வண்ண வண்ண விளக்குகளை கொண்டு ஒளிர விடுவது வழக்கம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தற்போது கேரல்ஸ், சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  அதேபோல், கிறிஸ்துவ மக்களின் வீடுகளின் மேல் ஸ்டார்களை வைத்து அலங்கரித்து வருகின்றனர். மேலும், வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அலங்காரங்கள் செய்து வருகின்றனர்.

Tags : Christmas ,
× RELATED சித்தோடு அருகே கத்தியை காட்டி...