நெரிசல் காரணமாக ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்

ஊட்டி, ஜன.17: ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்த நிலையில், பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம்  முதல் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில்  பெரும்பாலான சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தாவரவியல்  பூங்கா செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் மட்டுமின்றி, வாகன நெரிசலும்  ஏற்பட்டது. இதனால், இவ்வழித்தடம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அனைத்து  வாகனங்களும் வண்டிச்சோலை வழியாக மாற்றுப்பாதையில் பூங்காவிற்கு செல்ல  அனுமதிக்கப்பட்டன. அதேபோல், பூங்காவில் இருந்து வெளியேறும் அனைத்து  வாகனங்களும் கோத்தகிரி வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. அதேபோல்,  கமர்சியல் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. சேரிங்கிராஸ் சிக்னல்  பகுதியில் உள்ள சாலையிலும் மாற்றம் செயயப்பட்டு வாகனங்கள் செல்ல  அனுமதிக்கப்பட்டன. தொட்டபெட்டாவை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த  நிலையில், அச்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories:

>