கோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு செயற்கை கால் பொருத்தம்

கோவை, ஜன.17: கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு கால்களை இழந்த தொழிலாளிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.  கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (49). கூலி தொழிலாளி. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களையும் இழந்த நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எடை குறைந்த செயற்கை கால்களை டாக்டர்கள் பொருத்தினர்.  இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “சாலைவிபத்து மற்றும் சர்க்கரை நோயால் மாதந்தோறும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கை, கால்களை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு, கை, கால்களை இழந்தவர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்குக்கூட அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையுள்ளது. வெளியில் செயற்கை கால் பொருத்தினால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு இதுவரை 15 பேருக்கு வெற்றிகரமாக செயற்கை கை மற்றும் கால்கள் பொருத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories:

>