13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது

கோவை, ஜன.17:  கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (26). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான 7ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை கடந்த ஜனவரி மாதம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இவரை போல் சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயகுமார் (24) என்பவரும் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இவர் கட்டிட வேலைக்கு வந்தபோது மாணவியை பாலியல் ரீதியாக ெதாந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. மாணவி மூலம் இதையறிந்த  பெற்றோர் போலீசில் புகார் செய்தால் மானம் போய் விடும் என கருதி புகார் அளிக்கவில்லை.. இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் சமீபத்தில் செல்வபுரம் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது சிறார்களிடம் பாலியல் அத்துமீறல் நடந்தால் தகவல் தெரிவிக்கலாம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது அவர்களிடம்  அந்த மாணவி தனக்கு நடந்த அவலம் குறித்து கண்ணீருடன் தெரிவித்தார். இது தொடர்பாக குழந்தைகள் நல குழு அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி வழக்குப்பதிவு செய்தார். அதன் பேரில் மதிவாணன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>