தீயணைப்புத் துறையின் ‘தீ’ செயலி அறிமுகம்

மேட்டுப்பாளையம், ஜன. 17: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ‘தீ’ செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.தமிழ்நாடு  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு  மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை நேற்று ஆய்வு  செய்தார். அப்போது தீயணைப்புத் துறையின் உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர் தீயணைப்புத் துறையின் “தீ” செயலியை அறிமுகம் செய்துவைத்து அதன் பயன்பாடு  பொதுமக்களின் சேவை குறித்து விளக்கிக் கூறினார். பிறகு, தீயணைப்பு வீரர்களின் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பள்ளி  குழந்தைகளிடம் பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில்  மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ திலக், மற்றும் தீயணைப்பு  துறை பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக அவரை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் , உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி,  மேட்டுப்பாளையம் நிலைய அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories:

>