பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு, ஜன. 17: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இதில், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, துணை முதல்வர் டாக்டர் சந்திரபோஸ், ஊரட்சி ஒன்றியகுழுத்தலைவர் சாந்தி, ஜெயராஜ், மாவட்ட ஊரட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ஹேமலதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பெரியசாமி, பேரூர் செயலாளர் பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, பாலசுப்பிரமணி, வைகை தம்பி, துரைராஜ், பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகுமார், மாதேஷ், முத்துசாமி, அன்பரசு, பிரகாஷ் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>