தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கு மாஜி போலீஸ் உட்பட 2 பேர் கைது

சத்தியமங்கலம்,  ஜன.17:    தொழிலதிபர் உட்பட 3 பேரை கடத்திய வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன், கார்  டிரைவர் சுரேஷ், அவரது நண்பர் ஜெய் ஆகிய 3 பேரை கடந்த 7ம் தேதி சத்தியமங்கலத்தை  சேர்ந்த ஒரு கும்பல் இரிடியம் உள்ளதாக கூறி வரவழைத்து அவர்களை கடத்தி  வைத்து பணம் கேட்டு மிரட்டியதைத் தொடர்ந்து மோகனின் மனைவி வித்யா  சத்தியமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் கடந்த 10ம் தேதி தொழிலதிபரை கடத்தி வைத்து பணம்  கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கும்பலை சேர்ந்த 6 பேர் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார், அவர்களை தேடி  வந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள புதுசூரங்குடி  கிராமத்தை சேர்ந்த  மணி (56). இவர் ஏற்கனவே காவலராக பணிபுரிந்து  பணி நீக்கம் செய்யப்பட்ட இவரையும், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த  டெய்லர் சிவா (52) ஆகிய இருவருக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் 2 பேரும் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து  இருவரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து, கோபி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும்  தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More