சரிந்து விழும் நிலையில் அச்சுறுத்தும் ‘கூரைசெட்’ அகற்ற கோரிக்கை

சாத்தூர், ஜன. 13:  சாத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் மாஜி எம்.எல்.ஏ அலுவலக கூரை செட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் வெள்ளைக்கரை ரோட்டில் மாஜி எம்.எல்.ஏ அலுவலகம் கூரைசெட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை செட் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இது சரிந்து விழும் நிலையில் உள்ளது.

 இதனால், இப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். காணும் பொங்கலன்று மணல் மேட்டுத் திருவிழாவுக்கு, பொதுமக்கள் இந்த சாலையை கடந்துதான் செல்வர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள், மாஜி எம்எல்ஏ அலுவலக கூரைசெட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>