×

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 மினி கிளினிக் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, ஜன. 13:  விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து வருகிறார். இதுவரை விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் 35  மினி கிளினிக்குகளை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று சிவகாசி தொகுதியில் அம்மன் கோவில்பட்டி புதுத்தெரு, சிவகாசி அண்ணாவி தோட்டம் நாடார் மேற்கு தெரு நடராஜன் காலனி, சிவகாசி அருகே பூலாவூரணி, சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி முத்துராமலிங்கம் நகர்,  திருவில்லிபுத்தூர் தொகுதியில் மல்லி, ராஜாபாளையம் தொகுதியில் கிருஷ்ணாபுரம், சாத்தூர் தொகுதியில் விஜயகரிசல்குளம் ஆகிய 7 இடங்களில் மினிகிளினிக்குகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கண்ணன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், சிவகாசி நகர செயலாளர் அசன்பதூருதீன், ஒன்றிய கழக செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தெய்வம், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், பாலாஜி, மேற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், திருவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர், முத்தையா, ராஜபாளையம் நகர செயலாளர் ரானாபாஸ்கரன், அம்மா பேரவை செயலாளர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்  கிருஷ்ணராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் விஜயநல்லதம்பி, தங்கவேல், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் துரை முருகேசன்,  விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,clinics ,Virudhunagar district ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்